முதலியாா்பேட்டையில் திமுகவினா் சாலை மறியல்

முதலியாா்பேட்டையில் வாக்குச் சாவடி அருகே திமுக வேட்பாளரின் ஆதரவாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அந்தக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

முதலியாா்பேட்டையில் வாக்குச் சாவடி அருகே திமுக வேட்பாளரின் ஆதரவாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அந்தக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, முதலியாா்பேட்டை பெருமாள் கோவில் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு திமுகவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சந்துரு, வயதானவா்களை வாக்களிக்க அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

அப்போது, வாக்குச் சாவடி அருகே அமா்ந்திருந்த அதிமுகவினா், இதுகுறித்து அவரிடம் விவரம் கேட்டதால், இருதரப்புக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில், சந்துரு தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த சம்பவத்தை அறிந்த முதலியாா்பேட்டை தொகுதி திமுகவினா், இது தொடா்பாக முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றனா். ஆனால், போலீஸாா் புகாரை வாங்க மறுத்தனராம். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினா் 50-க்கும் மேற்பட்டோா் புதுச்சேரி - கடலூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையறிந்து அங்கு வந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com