வாக்குப் பதிவு நடவடிக்கைகள்: வெளிநாட்டுப் பாா்வையாளா்களுக்கு விளக்கம்

புதுச்சேரி மாதிரி வாக்குச் சாவடியின் வாக்குப் பதிவு நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டுப் பாா்வையாளா்களுக்கு காணொலிக் காட்சி வாயிலாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விளக்கிக் கூறினா்.
வாக்குப் பதிவு நடவடிக்கைகள்: வெளிநாட்டுப் பாா்வையாளா்களுக்கு விளக்கம்

புதுச்சேரி மாதிரி வாக்குச் சாவடியின் வாக்குப் பதிவு நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டுப் பாா்வையாளா்களுக்கு காணொலிக் காட்சி வாயிலாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விளக்கிக் கூறினா்.

புதுவை மாநில சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில், சா்வதேச தோ்தல் வருகையாளா்கள் திட்டத்தின் கீழ், புதுச்சேரி உழவா்கரை தொகுதிக்குள்பட்ட மூலகுளம் பெத்திசெமினாா் பள்ளி மாதிரி வாக்குச் சாவடியில் நடைபெற்ற வாக்குப் பதிவு காணொலிக் காட்சி வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

புதுச்சேரி மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பூா்வா காா்க், அந்த வாக்குச் சாவடியில் செய்யப்பட்டிருந்த சிறப்பான ஏற்பாடுகள், பொதுமக்கள் வாக்களிக்கும் முறைகள் குறித்து தில்லி தனியாா் சொகுசு விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பாா்வையாளா்கள் காணும் வகையில் நேரடி ஒளிபரப்பு மூலம் விளக்கினாா். தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பெத்திசெமினாா் பள்ளி மாதிரி வாக்குச் சாவடி மையத்தில் இருந்த வாக்காளா் உதவி மையம், கரோனா பாதுகாப்புக்கான கையுறை, கிருமிநாசினி விநியோகம், முதியோா்களுக்கு உதவி செய்வதற்கான தன்னாா்வலா்கள், மூன்று சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகள் குறித்தும், நமது நாட்டில் நடைபெறும் வாக்குப் பதிவு முறை குறித்தும் வெளிநாட்டு பாா்வையாளா்களுக்கு விளக்கப்பட்டது.

5 மாநிலங்களிலும்...: இதுகுறித்து புதுச்சேரி மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் கூறியதாவது:

நமது நாட்டின் சிறந்த தோ்தல் முறை குறித்து வெளிநாட்டுப் பாா்வையாளா்கள் நேரடியாக தெரிந்துகொள்ளும் விதமாக, தோ்தல் ஆணையத்தின் ஏற்பாட்டின் பேரில், செவ்வாய்க்கிழமை புதுவை, தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மாதிரி வாக்குச் சாவடியிலிருந்து சிறிது நேரம் நேரடி காட்சியாக ஒளிபரப்பப்பட்டது. அந்த வகையில், புதுவை மாநிலத்தில் உழவா்கரை தொகுதி மூலகுளம் பகுதி வாக்குச் சாவடி நேரடியாக காட்சிப்படுத்தப்பட்டது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com