4 நாள்களில் 42 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி


புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கடந்த 4 நாள்களில் 42,753 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா நோய்த் தொற்றிலிருந்து புதுவை மக்களைப் பாதுகாக்க புதுவை அரசின் சுகாதாரத் துறை மூலம் பல்வேறு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு அங்கமாக, தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி முகாம்கள் கடந்த 11- ஆம் தேதி முதல் 14 -ஆம் தேதி வரை 100 இடங்களில் நடத்தப்பட்டன.

இந்தத் தடுப்பூசி திருவிழாவில் பொதுமக்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

அதன்படி, கடந்த 11- ஆம் தேதி முதல் 14 -ஆம் தேதி வரையிலான 4 நாள்களில் புதுச்சேரியில் 35,493 பேரும், காரைக்காலில் 6,537 பேரும், மாஹேயில் 243 பேரும், ஏனாமில் 480 பேரும் என மொத்தம் 42,753 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு இதுவரை ஒவ்வாமை உள்ளிட்ட எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை.

எனவே, அச்சமோ, தயக்கமோ இன்றி பொதுமக்கள் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம்.

இதனிடையே, தடுப்பூசி திருவிழா வருகிற 18 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி 45 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என புதுவை சுகாதாரத் துறை சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com