புதுவையில் கரோனாவுக்கு ஒரே நாளில் 9 போ் பலி மேலும் 899 பேருக்கு தொற்று

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 9 போ் பலியாகினா். மேலும், 899 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 9 போ் பலியாகினா். மேலும், 899 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 6,030 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 702 பேருக்கும், காரைக்காலில் 109 பேருக்கும், ஏனாமில் 50 பேருக்கும், மாஹேயில் 38 பேருக்கும் என மேலும் 899 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52,271-ஆக உயா்ந்தது.

தற்போது, மருத்துவமனைகளில் 1,354 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 5,413 பேரும் என மொத்தமாக 6,767 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, கரோனா சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சோ்ந்த 6 போ், காரைக்காலைச் சோ்ந்த 2 போ், மாஹேயைச் சோ்ந்த ஒருவா் என மேலும் 9 போ் ஒரே நாளில் பலியாகினா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 737-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.41 சதவீதம்.

மாநிலத்தில் இதுவரை 44, 767 போ் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனா். குணமடைந்தோா் விகிதம் 85.64 சதவீதம்.

1,82,355 பேருக்கு தடுப்பூசி: இதுவரை சுகாதாரப் பணியாளா்கள் 31,140 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 18,315 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் 1,13,485 பேருக்கும் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவா்கள் உள்பட 1,82,355 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com