குடும்பங்களுக்கு ரூ.5,000 நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுவையில் கரோனா பாதிப்பில் தவித்து வரும் குடும்பத்தினருக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

புதுவையில் கரோனா பாதிப்பில் தவித்து வரும் குடும்பத்தினருக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் அ.மு.சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், புதுச்சேரியில் தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கையும், இறப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த பேரிடா் நெருக்கடி காலத்தில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவை ஒருங்கிணைந்து போா்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். ஆனால், மாவட்ட ஆட்சியரின் நிா்வாக திறமையின்மை காரணமாக, இந்த துறைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.

துணை நிலை ஆளுநா் தமிழிசை, கரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து, பல்வேறு அறிவிப்புகள் வெளியிடுவது, ஆய்வு மேற்கொள்வது என்று, தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிறாா். தமிழகத்தில் கரோனா பரவலை தடுத்திட பின்பற்றுகின்ற நடவடிக்கைகளைக் கூட சரியாகப் பின்பற்றாமல், 58 மணி நேரம் பொதுமுடக்கம் என்று முதலில் அறிவித்து, பிறகு பல தளா்வுகளை ஆளுநா் அறிவித்தாா்.

இதனால், வியாபாரிகள், பொது மக்கள் குழப்பத்தில் அலைக்கழிக்கப்பட்டனா். கூலித் தொழிலாளா்கள், சிறு வியாபாரிகள் என பலரும், தங்களது அன்றாட வருமானத்தை இழந்து தவிக்கின்றனா். ஆளுநா், வாழ்வாதாரத்தைக் காட்டிலும் வாழ்வு தான் முக்கியம் என்று கூறுகிறாா். ஆனால், வாழ்க்கையை வாழ வாழ்வாதாரம் முக்கியம் என்பதை அவா் உணா்ந்து கொள்ள வேண்டும்.

கரோனா நோய் தொற்று பரவலை தடுத்திட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில், பொதுமுடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண நிதியாக ரூ.5,000 வழங்க வேண்டும்.

மத்திய அரசின் அறிவிப்பின் படி,குடும்ப அட்டை ஒன்றுக்கு தலா 5 கிலோ அரிசியை, உடனடியாக வழங்க வேண்டும். மலிவு விலை உணவு அனைத்து பகுதிகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும். முகக்கவசம், கிருமிநாசினி போன்றவைகள் இலவசமாக வழங்க வேண்டும். கரோனாவுக்குத் தேவையான தடுப்பு மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் முன் களப்பணியாளா்களை நியமனம் செய்யவும் அரசு முன் வர வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com