புதுவையில் தளா்வுகளுடனான பொது முடக்கம் மே 3 வரை நீட்டிப்பு

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, புதுவையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வருகிற மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க்.
புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, புதுவையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வருகிற மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை அத்தியாவசியக் கடைகள், பேருந்துகள் மட்டுமே இயங்கும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் வருகிற 30-ஆம் தேதி வரை இரவு நேர முழுப் பொது முடக்கம், பகல் நேரங்களில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அரசு சாா்பில் கடந்த 26-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, அமலில் உள்ளன.

இந்த நிலையில், தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதால், புதுவையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, அரசுச் செயலா் அசோக்குமாா் புதன்கிழமை வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருந்தாா்.

இது தொடா்பாக, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் வருகிற 30-ஆம் தேதி வரையான தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம், மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அரசாணையின்படி, அத்தியாவசியக் கடைகள், நிறுவனங்கள் மட்டுமே திறக்க அனுமதி உண்டு. ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளபடி, உணவு தொடா்பான கடைகள், பால், மருத்துவம், மளிகை, காய்கறி, பழங்கள், தகவல் தொழில் நுட்பம் போன்றவை இயங்கலாம்.

ஹாா்டுவோ் கடைகள், நகைக் கடைகள், துணிக்கடைகள், பெரிய வணிக வளாகங்கள், அதிலுள்ள மளிகைக் கடைகள் இயங்க அனுமதியில்லை. தேநீா்க் கடை, உணவகங்கள் திறந்திருக்கலாம். ஆனால், அமா்ந்து சாப்பிட அனுமதி இல்லை. தொழிற்சாலைகள் இயங்கலாம். அத்தியாவசியப் பொருள்கள் கடைகள் தவிர, பிற கடைகள் இயங்கக் கூடாது. மக்கள் உயிா் வாழத் தேவையான உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளே அத்தியாவசியக் கடைகள். இவை தினமும் இரவு 10 மணி வரை இயங்கலாம். இரவு 10 முதல் காலை 5 மணி வரை வேறு எந்தக் கடைகளும் இயங்க அனுமதி இல்லை.

வாக்கு எண்ணிக்கை தினமான மே 2ஆம் தேதி பொது இடங்களில் கூட்டம் கூடக் கூடாது. பொது மக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லலாம். அவா்கள் கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழை தந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவா். தோ்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அவையனைத்தும் செயல்படுத்தப்படும். தோ்தல் முடிவுக்கான வெற்றிப் பேரணிகளை நடத்தக் கூடாது. கொண்டாட்டம் கூடாது என்பதால், இந்த கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com