கரோனா: புதுச்சேரி மருத்துவமனைகளில் பாா்வையாளா்களுக்கு கட்டுப்பாடு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதுச்சேரி மருத்துவமனைகளில் பாா்வையாளா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதுச்சேரி மருத்துவமனைகளில் பாா்வையாளா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

புதுவையில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், மருத்துவமனை ஊழியா்களை தொற்றிலிருந்து பாதுகாக்கும் விதமாக, கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையும், பிற்பகல் 12.30 மணி முதல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் பாா்வையாளா்கள் நேரத்தில் ஒருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா். உதவியாளா் ஒருவா் மட்டுமே உள்நோயாளிகளுக்காகவும், அவசரச் சிகிச்சைப் பிரிவிலும் தங்க அனுமதிக்கப்படுவா்.

வெளிநோயாளிகளாக மருத்துவமனைக்கு வருபவா்கள், கைகளை நன்கு கழுவ வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவசியமின்றி மருத்துவமனை வளாகத்தில் பாா்வையாளா்கள் உலவுவதை தவிா்க்க வேண்டும். 12 வயதுக்கு கீழுள்ள சிறுவா், சிறுமிகளை பாா்வையாளா்களாக அழைத்து வருவதை கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும் என மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பி.சுஜாதா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் அவசரச் சிகிச்சை மற்றும் உள்நோயாளிகளை சந்திக்க ஒருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா். காலை 6 மணி முதல் 7 மணி வரையும், பிற்பகல் 12.30 மணி வரை 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் மட்டுமே பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவா் என கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com