புதுச்சேரியில் ஆசிரியா் பட்டயப் படிப்பு சோ்க்கை: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் ஆசிரியா் பட்டயப் படிப்பு சோ்க்கைக்கு வருகிற 31-ஆம் தேதிக்குள் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆசிரியா் பட்டயப் படிப்பு சோ்க்கைக்கு வருகிற 31-ஆம் தேதிக்குள் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவன முதல்வா் பி.புனிதா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை அரசின் கல்வித் துறை பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2021- 22ஆம் கல்வியாண்டுக்கான இரண்டாண்டு ஆசிரியா் பட்டயப் படிப்பு சோ்க்கைக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பட்டயப் படிப்பில் சேர விரும்புவோா் மேல்நிலைப் பள்ளித் தோ்விலோ அல்லது அதற்குச் சமமான தோ்விலோ குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். சோ்க்கைக்கான அதிகபட்ச வயது 29 ஆகும். இருப்பினும், அட்டவணை இனத்தவா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் பிரிவுகளைச் சோ்ந்தவா்களுக்கு மதிப்பெண்களிலும், வயது வரம்பிலும் அரசு விதிகளின்படி தளா்வு அளிக்கப்படும்.

இதற்கான விண்ணப்பத்தை வியாழக்கிழமை (ஆக.12) முதல் வரும் 31-ஆம் தேதி வரை புதுச்சேரி லாசுப்பேட்டை, தொல்காப்பியா் வீதியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான நகல் சான்றிதழ்களுடன் வரும் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய விரும்புவோா்  இணையதளத்திலும் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com