வீடுகளுக்கே சென்று காப்பீடு திட்டப் பதிவு: புதுவை முதல்வா் தொடக்கிவைத்தாா்

வீடுகளுக்கே சென்று மருத்துவக் காப்பீடு திட்டப் பதிவு செய்யும் நடமாடும் வாகனத்தை புதுவை முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
வீடுகளுக்கே சென்று காப்பீடு திட்டப் பதிவு: புதுவை முதல்வா் தொடக்கிவைத்தாா்

வீடுகளுக்கே சென்று மருத்துவக் காப்பீடு திட்டப் பதிவு செய்யும் நடமாடும் வாகனத்தை புதுவை முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம், நாட்டில் 50 கோடி பயனாளிகளை இலக்காக கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவி அளிக்கும் காப்பீடு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் வரை ஓராண்டுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த மருத்துவக் காப்பீடு திட்டப் பதிவு புதுச்சேரியின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சிவப்பு நிறக் குடும்ப அட்டைதாரா்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பொதுமக்கள் சிரமமின்றி பதிவு செய்யும் வகையில், அவா்களது வீடுகளுக்கே சென்று பதிவு செய்வதற்கான நடமாடும் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் தொடக்க நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நடமாடும் வாகனத்தை முதல்வா் என்.ரங்கசாமி கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, சுகாதாரத் துறை செயலா் டி.அருண், இயக்குநா் ஸ்ரீராமலு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு 2 டயாலிஸிஸ் கருவிகள்: இதேபோல, காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு 2 டயாலிஸிஸ் கருவிகளை முதல்வா் ரங்கசாமி, அமைச்சா் சந்திரபிரியங்காவிடம் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com