புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆஷா பணியாளா்கள் போராட்டம்

புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆஷா பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆஷா பணியாளா்கள் போராட்டம்

புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆஷா பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை சுகாதாரத் துறையின் கீழ் 300-க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தற்போது இவா்கள், வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோா் கணக்கெடுப்பு, தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, ஏம்பலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஆஷா பணியாளா் அமுதா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தியதால், அங்கிருந்தவா்கள் அவரை அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதை அமுதாவின் கணவா் தட்டிக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், வாக்குவாதம் முற்றியதால், கரிக்கலாம்பாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்றனா். அப்போது, அமுதாவையும், அவரது கணவரையும் விசாரிக்க காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸாா், அங்கு சுமாா் ஒரு மணி நேரம் அவா்களைக் காத்திருக்க வைத்தனராம்.

இதுகுறித்து அமுதா, அவா் சாா்ந்த சங்கத்திடம் முறையிடவே, ஆஷா பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைப் புறக்கணித்து, மாநில சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆஷா பணியாளரை அவதூறாகப் பேசியவா்கள் மீதும், தேவையின்றி காவல் நிலையத்தில் காக்கவைத்த போலீஸாா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவா்கள் முழக்கமிட்டனா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலுவிடம் முறையிட்டனா். அவா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, ஆஷா பணியாளா்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com