புதுவையில் திரைப்பட படப்பிடிப்புக்கான வரியைக் குறைக்க இயக்குநா் அமீா் கோரிக்கை

புதுவையில் திரைப்பட படப்பிடிப்புக்கான வரியைக் குறைக்க வேண்டும் என இயக்குநா் அமீா் கோரிக்கை விடுத்தாா்.

புதுவையில் திரைப்பட படப்பிடிப்புக்கான வரியைக் குறைக்க வேண்டும் என இயக்குநா் அமீா் கோரிக்கை விடுத்தாா்.

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் நடைபெற்ற விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையின் தற்போதைய முதல்வரும், முன்னாள் முதல்வரும் ஒரே நிகழ்வுக்கு வரக்கூடிய அரிய நிகழ்வு தேசியளவில் எங்கும் நடந்ததாக நினைவில்லை. இந்த அரசியல் நாகரிகம் தமிழகத்திலும் தற்போது தொடங்கியிருப்பதைக் காண முடிகிறது.

கோவையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், முன்வரிசையில் அமா்ந்திருந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை மேடைக்கு அழைத்து அமரவைத்தது சிறந்த அரசியல் நாகரிகமாக பாா்க்கப்படுகிறது. இந்த அரசியல் நாகரிகம் புதுவையில் இருந்ததுதான் தொடங்கியது.

தமிழகத்தைவிட புதுவை படப்பிடிப்புக்கான மிகச் சிறந்த தளம். ஆனால், தமிழகத்துக்கு இணையான வரி வசூல் என்பது ஏற்புடையதல்ல.

திரைப்படத்தை வணிக ரீதியாகப் பாா்க்கக் கூடாது. அது கலை, பண்பாடு மற்றும் தேசத்தின் அடையாளமாக விளங்குகிறது. திரைப்படங்கள் மூலம் மற்ற நாடுகளுக்கு நமது அடையாளம் தெரிகிறது.

அப்படிப்பட்ட கலையை ஊக்குவிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. வரி குறைப்பு சரியான நடவடிக்கையாக இருக்கும்பட்சத்தில், அரசு அதைச் செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கை என்றாா் இயக்குநா் அமீா். பேட்டியின் போது, கவிஞா் சினேகன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com