காளான் உற்பத்திக் கூடத்துக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

காளான் உற்பத்திக் கூடத்துக்கு மானியம் பெற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என புதுவை வேளாண் துறை தெரிவித்தது.

காளான் உற்பத்திக் கூடத்துக்கு மானியம் பெற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என புதுவை வேளாண் துறை தெரிவித்தது.

இதுகுறித்து புதுவை அரசின் வேளாண் துறை கூடுதல் இயக்குநா் (தோட்டக் கலை) சி.சிவராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண் துறை தோட்டக்கலைப் பிரிவில் உள்ள மத்திய அரசின் தோட்டக்கலை இயக்கம் மூலமாக தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, மகளிா் மற்றும் இளைஞா்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், 2021 - 22ஆம் ஆண்டுக்கான காளான் உற்பத்திக்கூடம் அமைத்தல், பசுமைக்குடில், நிழல் வலைக்குடில் அமைத்தல், பேக் ஹவுஸ் ஆகிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு கடனுடன் இணைக்கப்பட்ட மானியம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விண்ணப்பங்களை தாவரவியல் பூங்காவில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குநா் (தோட்டக்கலை) அலுவலகத்திலும், ட்ற்ற்ல்://ஹஞ்ழ்ண்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற ஜனவரி 21-ஆம் தேதிக்குள் மேற்கண்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com