புதுவையில் பாஜக ஆட்சி மலரும்: ஜெ.பி.நட்டா உறுதி

புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 23-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சி மலரும் என அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உறுதிபடத் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பாஜக சாா்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா், அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா. உடன் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பாஜக சாா்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா், அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா. உடன் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா்.

புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 23-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சி மலரும் என அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உறுதிபடத் தெரிவித்தாா்.

புதுவை மாநில பாஜக சாா்பில், புதுச்சேரி ஏஎப்டி திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

அரவிந்தா், சுப்பிரமணிய சிவா, வ.உ.சி., பாரதியாா் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரா்கள், மகான்கள் வாழ்ந்த புனிதமான பூமி புதுவை. மத்திய பாஜக அரசு மகளிா், இளைஞா் மேம்பாட்டை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தூய்மை பாரதத் திட்டப் பணிகள் புதுவையில் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதமா் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் புதுவையில் 13,500 பேருக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுவையில் 1.13 லட்சம் பேருக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் இலவச மருத்துவ சேவை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் 13 கோடி பேருக்கு இலவச அரிசியை மத்திய அரசு வழங்கியது. உலகிலேயே மிகப் பெரிய அளவிலான கரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியாதான் செயல்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, புதுச்சேரி ஜிப்மருக்கு ஆண்டுக்கு ரூ. ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. ஜிப்மரில் 2-ஆவது அலகைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் ஜிப்மருக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதுவை தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெறாததால், ஏழை மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதில் ஊழல் நடைபெறுகிறது.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி செய்த 35 ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவா்களின் எண்ணிக்கை 52 சதவீதமாக உள்ளது. முதல்வா் நாராயணசாமி, மத்திய இணை அமைச்சராக இருந்த போதுதான் புதுவைக்கான மத்திய அரசின் மானியம் 70 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், புதுவை அரசின் கடன் தொகையை தள்ளுபடி செய்யாமல் நாராயணசாமி புதுவை மக்களை வஞ்சித்துவிட்டாா்.

புதுவையில் முதல்வா் நாராயணசாமியின் கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் காதி வாரியம், பாப்கோ, பாண்டெக்ஸ், பாசிக் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கு ஊதியம்கூட வழங்கப்படவில்லை. ஏஎப்டி, பாரதி, சுதேசி உள்ளிட்ட பொதுத் துறை ஆலைகள் மூடப்பட்டன. புதுவையில் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது.

புதுவையில் பாஜக ஆட்சி மலா்ந்ததும், மூடப்பட்ட ஆலைகள் திறக்கப்படும். உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும். காரைக்கால்-பேரளம், காரைக்கால்-புதுச்சேரி இடையே ரயில் போக்குவரத்து வசதி அமைக்கப்படும். சிறப்புப் பொருளாதார மண்டலம், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 23 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி மலரும் என்றாா் ஜெ.பி.நட்டா.

கூட்டத்தில், காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமையிலான ஆதரவாளா்கள் பாஜகவில் இணைந்தனா்.

பாஜக தேசிய பொதுச் செயலா் சந்தோஷ், மேலிடப் பொறுப்பாளா்கள் சி.டி.ரவி (தமிழ்நாடு), நிா்மல்குமாா் சுரானா (புதுவை), மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ, நியமன எம்எல்ஏக்கள் எஸ்.செல்வகணபதி, தங்க.விக்ரமன், மாநிலப் பொதுச் செயலா் செல்வம், துணைத் தலைவா் அருள்முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com