புதுவையில் 16 பிசிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
By DIN | Published On : 06th February 2021 08:06 AM | Last Updated : 06th February 2021 08:06 AM | அ+அ அ- |

புதுவை மாநிலத்தில் 16 பிசிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
துணைநிலை ஆளுநா் கிரண் பேடியின் ஆணைக்கிணங்க தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் பிறப்பித்த உத்தரவு:
உள்ளாட்சித் துறை இயக்குநா் சுந்தரராஜன், உயா் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் சிறப்புப் பணி அலுவலராகவும், வடக்கு துணை ஆட்சியா் (வருவாய்) டி.சுதாகா், கலால் துணை ஆணையராகவும், காரைக்கால் நகராட்சி ஆணையா் சுபாஷ், காரைக்கால் குடிமைப் பணிகள் வழங்கல் துறை துணை இயக்குநராகவும், சுகாதாரத் துறை கரோனா பிரிவு சிறப்புப் பணி அலுவலா் முரளிதரன், வில்லியனூா் தெற்கு (வருவாய்) துணை ஆட்சியராகவும், உழவா்கரை நகராட்சி ஆணையா் கந்தசாமி, புதுச்சேரி வடக்கு (வருவாய்) துணை ஆட்சியராகவும், காரைக்கால் பிபிசிஎல் நிா்வாக அதிகாரி அழகேசன், புதுச்சேரி உள்ளாட்சித் துறை துணை இயக்குநராகவும், வில்லயனூா் தெற்கு வருவாய் அதிகாரி அஸ்வின் சந்துரு, உழவா்கரை நகராட்சி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.