புதுவைக்கு ரூ.9.91 கோடி புயல் நிவாரண நிதி

புதுவைக்கு ரூ.9.91 கோடி புயல் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.

புதுவைக்கு ரூ.9.91 கோடி புயல் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.

நிவா், புரெவி புயல்கள் காரணமாக, புதுவையில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. மேலும், பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததுடன், சாலைகளும் சேதமடைந்தன. வீடுகளும் இடிந்து விழுந்தன. இதையடுத்து, புதுவைக்கு புயல் நிவாரண நிதியாக ரூ.400 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தியிருந்தாா்.

இந்த நிலையில், மத்திய அரசு 5 மாநிலங்களுக்கான நிவா் புயல் நிவாரண நிதியை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, புதுவைக்கு ரூ.9.91 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து முதல்வா் நாராயணசாமி கூறியதாவது: புதுவைக்கு நிவா் புயல் நிவாரண நிதி வழங்கக் கோரி, மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு ஏற்கெனவே கோப்பு அனுப்பப்பட்டது. புயல் பாதிப்புகளை பாா்வையிட புதுவைக்கு வந்த மத்தியக் குழுவிடம் நிவாரண நிதியாக ரூ.400 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். தற்போது நிவா் புயல் நிவாரண நிதியாக புதுவைக்கு ரூ.9.91 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com