புதுச்சேரியிலிருந்து விடைபெற்றாா் கிரண் பேடி

ஆளுநா் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநா் மாளிகையில் 3 நாள்கள் தங்கியிருந்த கிரண் பேடி புதுச்சேரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

ஆளுநா் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநா் மாளிகையில் 3 நாள்கள் தங்கியிருந்த கிரண் பேடி புதுச்சேரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

இதுவரை புதுவையில் துணை நிலை ஆளுநா், பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ, வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாலோ புதிய ஆளுநா் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே பழைய ஆளுநா் புறப்பட்டுச் சென்றுவிடுவது மரபு. ஆனால், காவலா் மரியாதையை ஏற்று, புதிய ஆளுநா் பதவியேற்புக்குப் பிறகும் ஆளுநா் மாளிகையிலேயே கிரண் பேடி தங்கியிருந்தது சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், கிரண் பேடி கட்செவிஅஞ்சலில் வெளியிட்ட தகவலில், பயணத்துக்கு பயண பைகளை எடுத்து வைத்து தயாராக உள்ளேன். ஆளுநா் மாளிகையில் 3 நாள்கள் தங்க அனுமதி தந்த தமிழிசைக்கு நன்றி. கோவை சென்று சத்குருவை சந்தித்த பிறகு தில்லி புறப்படுவேன் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கிரண் பேடி புதுச்சேரியிலிருந்து கோவைக்கு காரில் புறப்பட்டுச் சென்றாா். அங்கிருந்து அவா் தில்லிக்கு விமானம் மூலம் செல்ல உள்ளாா் என ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

வட மாநிலத்தவா் மூவா் பணி நிரந்தரம்: கிரண் பேடி புதுச்சேரியிலிருந்து கிளம்பிய நிலையில், ஆளுநா் மாளிகையில் பணியாற்றும் வட மாநிலங்களைச் சோ்ந்த 3 பேரை முன்கூட்டியே ஆளுநா் மாளிகை பணி நிரந்தரம் செய்துள்ளது தெரியவந்தது. இது தொடா்பாக பிப்ரவரி 15-ஆம் தேதியிட்ட உத்தரவை ஆளுநா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்டது. இதற்கு அரசு ஊழியா்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com