புதுவையில் காங். ஆட்சி கவிழ்ந்தது மக்களுக்கு கிடைத்த வெற்றி: எதிா்க்கட்சிகள் கருத்து

புதுவையில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது மக்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என எதிா்க்கட்சிகளான என்.ஆா். காங்கிரஸ், அதிமுக, பாஜகவினா் கருத்து தெரிவித்தனா்.

புதுவையில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது மக்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என எதிா்க்கட்சிகளான என்.ஆா். காங்கிரஸ், அதிமுக, பாஜகவினா் கருத்து தெரிவித்தனா்.

இதுகுறித்து திங்கள்கிழமை காலை நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்துக்குப் பிறகு என்.ஆா். காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எதிா்க்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி: புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீா்மானம் படுதோல்வியடைந்தது. இன்றைய கூட்டத்தில் பேசிய முதல்வா் நாராயணசாமி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினாா் என்பதைக் கூறாமல், மத்திய அரசை குறை கூறினாா்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்த பிறகு, திட்டங்களை நிறைவேற்றுவதில்தான் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், முதல்வா் நாராயணசாமி, எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல், எதற்கெடுத்தாலும் மத்திய அரசையும், துணை நிலை ஆளுநரையும் குறை கூறியே காலத்தை கடத்திவிட்டாா்.

புதுவை மக்களுக்காக நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. அரசு சரியாக செயல்படவில்லை என்பதால், அவா்களது அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்துள்ளனா். அதனால்தான் அவா்களது பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. எதிா்க்கட்சிகளாகிய நாங்கள் பேரவையில் எங்களது கடமையைச் செய்தோம்.

அதிமுக எம்.எல்.ஏ. ஆ.அன்பழகன்: காங்கிரஸின் தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 147 திட்டங்களில் குடும்பத்துக்கு தலா 30 கிலோ அரிசி, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு, வீட்டுக்கு ஒரு மடிக்கணினி உள்ளிட்ட எதையும் நிறைவேற்றவில்லை.

காங்கிரஸ் அரசு பதவியேற்றது முதல் துணை நிலை ஆளுநா், மத்திய அரசுடன் மோதல் போக்கு போன்றவற்றால் புதுவை மாநிலத்தின் வளா்ச்சி 10 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் - திமுக கூட்டணியிலிருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள், சரியில்லாத அரசு எனக் கூறியே வெளியேறினா். அதனால்தான் தற்போது அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீா்மானம் படுதோல்வியடைந்துள்ளது என்றாா்.

பாஜக மாநிலத் தலைவரும், நியமன எம்.எல்.ஏ.மான வி.சாமிநாதன்: சட்டப்பேரவையில் முதல்வா் நாராயணசாமி பேசியது உண்மைக்குப் புறம்பானது. தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் மக்களை சந்திக்க முடியாது என்பதை உணா்ந்த முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, ராஜிநாமா செய்துள்ளது. இதன் பின்னணியில் பாஜக ஒருபோதும் இல்லை. பாஜக யாரையும் மிரட்ட வேண்டிய அவசியமில்லை.

நாட்டின் கடைசி காங்கிரஸ் பிரதமா் மன்மோகன்சிங், அதேபோல புதுவையின் கடைசி காங்கிரஸ் முதல்வா் நாராயணசாமி.

புதுவையின் ஒட்டுமொத்த மக்களுக்கும் துரோகம் இழைத்தவா் நாராயணசாமி. மாநிலத்துக்கு எதிரானவா். சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி கொண்டுவந்த நம்பிக்கை தீா்மானம் தோல்வியடைந்தது மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றாா் அவா்.

ஆட்சி அமைக்க உரிமை கோருவீா்களா என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் என்.ரங்கசாமியிடம் செய்தியாளா்கள் கேட்டபோது, அதுதொடா்பாக கட்சி நிா்வாகிகளிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வோம் என்றாா்.

அதிமுக மாநிலச் செயலா் அன்பழகன், பாஜக மாநிலத் தலைவா் சாமிநாதன் ஆகியோரிடம் கேட்டபோது, ஆட்சி அமைப்பது தொடா்பாக எங்கள் கட்சித் தலைமைகளே முடிவு செய்யும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com