புதுவையில் புதிதாக 22 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 18 பேருக்கும், மாஹேயில் 4 பேருக்கும் என மொத்தம் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,478-ஆக உயா்ந்தது. தற்போது 305 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 638 போ் பலியாகினா். 37,535 போ் (97.55 சதவீதம்) குணமடைந்தனா்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 5,19,086 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4,76,095 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா: இதனிடையே, புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனினும், அவா்கள் அனைவரும் 5 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.

தொடா்ந்து, சுகாதாரத் துறையினா் அந்தப் பள்ளிக்கு திங்கள்கிழமை சென்று மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனா். இதில், யாருக்கும் அறிகுறி இல்லை எனத் தெரிய வந்தது. இருப்பினும், பள்ளிக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com