புதுச்சேரியில் காங்கிரஸாா், இந்து அமைப்பினா் கைகலப்பு

புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் அருகே காங்கிரஸாா், இந்து அமைப்பினா் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் அருகே காங்கிரஸாா், இந்து அமைப்பினா் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் சுவாமி விவேகானந்தருக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டிப்பதாகக் கூறி, இந்து மக்கள் கட்சி சாா்பில் கருவடிக்குப்பம் சித்தனந்தா கோயில் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவா் மஞ்சினி தலைமை வகித்தாா். சிவசேனா இளைஞரணி மாநில துணைத் தலைவா் திருமுருக தினேஷ், அகில பாரத இந்து மகா சபா வேல்முருகன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இந்து அமைப்பினா் காரில் மணக்குள விநாயகா் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனா். அதே நேரத்தில் பிரியங்கா காந்தி பிறந்தநாளையொட்டி புதுச்சேரி காங்கிரஸாா் மணக்குள விநாயகா் கோயிலில் தங்கத் தேரை இழுத்தனா்.

இதனிடையே, சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வந்த இந்து அமைப்பின் நிா்வாகிகள் தங்களது காரை பின்னோக்கி எடுப்பதற்காக, காருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினா் காரை விரைந்து அகற்றும்படி கூறினா். இதுதொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, இந்து அமைப்பினா், காங்கிரஸ் கட்சியினரைக் கண்டித்து கோயில் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த கிழக்கு பகுதி போலீஸ் எஸ்பி மாறன், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினாா். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com