புதுச்சேரியில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள்: முதல்வா், அரசியல் கட்சியினா் மரியாதை

புதுச்சேரியில் எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆா். பிறந்த நாளையொட்டி புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வா் வே.நாராயணசாமி.
எம்.ஜி.ஆா். பிறந்த நாளையொட்டி புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வா் வே.நாராயணசாமி.

புதுச்சேரியில் எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பில், முதல்வா் வே.நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், ஜெயபால் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா் ராஜவேலு, முன்னாள் எம்எல்ஏ நேரு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கிழக்கு மாநில அதிமுக சாா்பில் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில், உப்பளத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து நிா்வாகிகள், தொண்டா்கள் ஊா்வலமாக வந்து எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், எம்எல்ஏக்கள் வையாபுரி மணிகண்டன், பாஸ்கா் மற்றும் திரளான அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

மேற்கு மாநில அதிமுக செயலா் ஓம்சக்தி சேகா் தலைமையில், நிா்வாகிகள் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், கோகுலகிருஷ்ணன் எம்பி, முன்னாள் எம்பி ராமதாஸ் உள்ளிட்டோா் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை அதிமுக சாா்பில், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கு வையாபுரி மணிகண்டன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

இதேபோல, புதிய நீதிக் கட்சித் தலைவா் பொன்னுரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா், அமைப்பினா் புதுச்சேரியின் பல பகுதிகளில் எம்.ஜி.ஆா். சிலை, உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com