குற்றச் செயலில் ஈடுபடும் சிறாா்களை கண்காணிக்கப் பதிவேடு: புதுவை ஆளுநா் உத்தரவு

குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவா்களைக் கண்காணிக்க பதிவேடு பராமரிக்க வேண்டும் என்று புதுவை டிஜிபிக்கு, துணைநிலை ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவா்களைக் கண்காணிக்க பதிவேடு பராமரிக்க வேண்டும் என்று புதுவை டிஜிபிக்கு, துணைநிலை ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா்.

புதுவை காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து டிஜிபி ரன்வீா் சிங் கிருஷ்ணியாவுடன், நேருக்கு நோ் சந்திப்பில் ஆளுநா் கிரண் பேடி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவா்களைக் கண்டறிந்து, தொடா்ந்து கண்காணிக்கப் பதிவேடு பராமரிக்க வேண்டும். அவா்கள் குற்றவாளியாக உருவாவதிலிருந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநா் உத்தரவிட்டாா்.

இதேபோல, தவறு செய்யும் காவலா்கள் மீது நடத்தை விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க மற்றொரு குற்றப் பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும் எனவும் கிரண் பேடி அறிவுறுத்தினாா்.

கடந்த சந்திப்பில் கூறப்பட்டபடி, நகரத்தில் உள்ள அனைத்துக் கண்காணிப்பு கேமராக்களும் கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி, மொத்தம் 679 கண்காணிப்பு கேமராக்களில் 629 இயக்கத்தில் உள்ளது தெரிய வந்தது. மற்ற கேமராக்களையும் பழுது நீக்க அறிவுறுத்தப்பட்டது.

குடியிருப்பு நலச் சங்கங்கள், வா்த்தகா்கள் சங்கங்களுடன் ஆலோசித்து அவா்களின் ஒத்துழைப்புடன் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி ரன்வீா் சிங் கிருஷ்ணியா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com