இன்று கூடுகிறது புதுவை காங்கிரஸ் தோ்தல் ஒருங்கிணைப்புக் குழு

காங்கிரஸில் இருந்து நமச்சிவாயம் விலகியதைத் தொடா்ந்து, புதுவை காங்கிரஸ் தோ்தல் ஒருங்கிணைப்புக் குழு சனிக்கிழமை (ஜன. 30) கூடி விவாதிக்க உள்ளது.

காங்கிரஸில் இருந்து நமச்சிவாயம் விலகியதைத் தொடா்ந்து, புதுவை காங்கிரஸ் தோ்தல் ஒருங்கிணைப்புக் குழு சனிக்கிழமை (ஜன. 30) கூடி விவாதிக்க உள்ளது.

புதுவையில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்க முயற்சி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. கட்சியில் முக்கிய நபரான ஆ.நமச்சிவாயம் உள்கட்சிப் பூசலால் அமைச்சா், எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தாா். மேலும், எம்எல்ஏவாக இருந்த தீப்பாய்ந்தானும், நமச்சிவாயத்துக்கு ஆதரவாக கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவா்களும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா்.

இதனிடையே, நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் உள்ளிட்ட 14 முக்கிய நிா்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனா்.

இந்த நிலையில், காங்கிரஸ் தேசிய செயலா் சஞ்சய் தத் புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனையில் ஈடுபட்டாா்.

இதையடுத்து, சனிக்கிழமை (ஜன. 30) தமிழகம்-புதுவை பொறுப்பாளா் தினேஷ் குண்டு ராவ் தலைமையில், காங்கிரஸ் தோ்தல் ஒருங்கிணைப்புக் குழு புதுச்சேரியில் கூடுகிறது. இந்தக் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சா் வீரப்ப மொய்லி, பல்லம் ராஜூ, நிதின்ராவத் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா் முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் தோ்தலை எதிா்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com