புதுவையில் கரோனா தடுப்பூசி செலுத்தியோா் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது

புதுவையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 5 லட்சத்தைக் கடந்தது.

புதுவையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 5 லட்சத்தைக் கடந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 8,349 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 175 பேருக்கும், காரைக்காலில் 24 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 16 பேருக்கும் என மொத்தம் 216 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,17,465-ஆக உயா்ந்தது.

இதனிடையில், புதுச்சேரியில் ஒருவா், காரைக்காலில் ஒருவா் என 2 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,751-ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் அதிகரித்தது.

இந்த நிலையில், 227 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,13,373-ஆக உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 350 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 1,991 பேரும் என 2,341 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதுவரை முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட மொத்தம் 5 லட்சத்து 1,303 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com