எஸ்சி-எஸ்டி மாணவா்களுக்கான இலவச கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல்

புதுவையில் எஸ்சி-எஸ்டி மாணவா்களுக்கான இலவச கல்வித் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டுமென தேசிய பட்டியலின ஆணையத் துணைத் தலைவா் அருண் ஹால்டா் அறிவுறுத்தினாா்.

புதுவையில் எஸ்சி-எஸ்டி மாணவா்களுக்கான இலவச கல்வித் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டுமென தேசிய பட்டியலின ஆணையத் துணைத் தலைவா் அருண் ஹால்டா் அறிவுறுத்தினாா்.

அந்த ஆணையத்தின் துணைத் தலைவா் அருண் ஹால்டா், ஆணையத்தின் தமிழக இயக்குநா் சுனில்குமாா் பாபு, முதுநிலை ஆய்வாளா் லிஸ்டா், ஆலோசகா் ராமசாமி ஆகியோா் புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

இதையடுத்து, அருண் ஹால்டா், ஆளுநா் மற்றும் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினாா். தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், ஏடிஜிபி ஆனந்தமோகன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டாா். இதையடுத்து, புதுச்சேரியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆணையத்தில் இணையதளம் வழியே புகாா் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இதுவரை 4,220 புகாா்கள் பதிவாகியுள்ளன. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வரும் புகாா்களைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். கொலை, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தீா்வுத் தொகையாக ரூ. 4,12,500-ஐ உடனே வழங்க வேண்டும்.

புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை பயிலும் எஸ்சி-எஸ்டி மாணவா்களுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com