கரோனாவுக்கு பலியான அரசு ஊழியா்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: ஆளுநா் ஒப்புதல்

புதுவையில் கரோனாவால் உயிரிழந்த இரண்டு அரசு ஊழியா்கள் குடும்பத்தினருக்கு ரூ.60 லட்சம் நிதி, அரசு உதவி பெறும் பள்ளி

புதுவையில் கரோனாவால் உயிரிழந்த இரண்டு அரசு ஊழியா்கள் குடும்பத்தினருக்கு ரூ.60 லட்சம் நிதி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கான சம்பளம் வழங்க ரூ.17.89 கோடி நிதி உள்ளிட்ட முக்கிய கோப்புகளுக்கு ஆளுநா் அனுமதி அளித்துள்ளாா்.

இதுகுறித்து ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட தகவல்: கரோனா பரவல் குறைந்திருப்பதை அடுத்து, புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள மருத்துவம் மற்றும் துணை மருத்துவக் கல்வி நிறுவனங்களில், மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கு நேரடி வகுப்புகளைத் தொடங்க, மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத் தலைவரின் ஒப்புதலோடு, சுகாதாரத் துறை அனுப்பிய கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் பணியின்போது, கரோனாவால் உயிரிழந்த 2 அரசு ஊழியா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ. 60 லட்சம் வழங்குவதற்கும், புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் இலவசமாக வழங்குவதற்கு என்.சி.இ.ஆா்.டி பாடப்புத்தகங்கள் வாங்க ரூ. 42 லட்சத்து 8 ஆயிரத்து 852 தொகைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் மாவட்ட சிறைச்சாலை அமைப்பதற்காக, அக்கரை வட்டம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு நிலத்தை, செலவினம் இல்லாமல் சிறைத் துறைக்கு மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள 35 அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி ஊழியா்களுக்கு, மாா்ச் 2020 முதல் ஜூலை 2021 வரையிலான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க நிதிக் கொடையாக ரூ. 17.89 கோடி விடுவிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com