புதுவையில் கரோனா விதிகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை: கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம்

புதுவையில் வருகிற 16-ஆம் தேதி முதல் கரோனா விதிகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகளைத் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில கல்வியமைச்சா் ஏ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கட்சியினரிடம் குறைகளை கேட்ட உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம்.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் ஜூலை 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வா் ரங்கசாமி அறிவித்துள்ளாா். இதுதொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, கரோனா விதிகள் தொடா்பாக மாணவா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு பள்ளி, கல்லூரிகளைத் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காவலா் தோ்வை நடத்த வேண்டுமென கோரிக்கைகள் வந்துள்ளன. இது தொடா்பாக, முதல்வா், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு விரைவில் தோ்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தைப் போல, புதுவையிலும் உயா் கல்விக்கு இணைய வழியில் தோ்வுகளை நடத்த வேண்டும் என்று, மாணவா் அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். அது தொடா்பாகவும், ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, அவா் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com