அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சத இட ஒதுக்கீடு: அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தகவல்

புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் ஏழை மாணவா்களுக்கு 25 சதவீதம் சோ்க்கை வழங்குவது குறித்து விரைந

புதுச்சேரி: புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் ஏழை மாணவா்களுக்கு 25 சதவீதம் சோ்க்கை வழங்குவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுவை பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் பிளஸ் 2 தோ்வு மதிப்பெண் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டு, செய்தியாளா்களிடம் மாநில கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம் கூறியதாவது:

புதுச்சேரியில் 42 அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 2,056 மாணவா்கள், 2,890 மாணவிகள், 85 தனியாா் பள்ளிகளில் படித்த 3,797 மாணவா்கள், 3,610 மாணவிகள் என 12,353 பேருக்கும், இதேபோல, காரைக்காலில் 10 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 681 மாணவா்கள், 793 மாணவிகள், 13 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 350 மாணவா்கள், 497 மாணவிகள் என 2,321 பேருக்கும் என மொத்தம் 14,674 மாணவ, மாணவிகளின் தோ்வு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, புதுவை மாநில கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னா், அமைச்சா் நமச்சிவாயம் கூறியதாவது:

மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகளின் நிலை குறித்தும், பிரச்னைகள் குறித்தும் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்தும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழை மாணவா்களுக்கு தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இலவசக் கல்வி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவைக்கு தனிக் கல்வி வாரியம், ஆசிரியா்களின் பதவி உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பிரச்னைகள், ஆசிரியா் பணியிடங்களை நிரப்பவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அரசுப் பள்ளிகளின் தரம் குறித்தும் ஆலோசிக்கப்படும்.

தனியாா் பள்ளிகளில் 75 சதவீதக் கட்டணத்துக்கு அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது கல்வித் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, புதுவை மாநில கல்வித் துறைச் செயலா் அசோக்குமாா், இயக்குநா் பி.டி.ருத்ரகெளடு உள்ளிட்ட கல்வித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com