நல்லவாடு மீனவ கிராமத்தில் குறைகேட்பு

புதுச்சேரி நல்லவாடு மீனவ கிராமப் பகுதியில் சனிக்கிழமை பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அங்கு பனை விதைகள் நடும் பணியைத் தொடக்கிவைத்தாா்.
புதுச்சேரி நல்லவாடு கிராமத்தில் பனை விதை நடும் பணியைத் தொடக்கிவைத்த சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.

நல்லவாடு பகுதியில் உயா் கோபுர மின் விளக்கு அமைக்கவும், மீன் ஏலக்கூடம், வலைகள் வைக்கும் கொட்டகை அமைக்கவும், புதிய சிமென்ட் சாலைகள் அமைக்கவும் அந்தப் பகுதி மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். அந்தப் பகுதியில் அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்ட பேரவைத் தலைவா், அந்த இடங்களில் உயா் கோபுர மின் விளக்கு, வலை உலா்த்தும் கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, அந்தப் பகுதியில் சுந்தராம்பாள் சமூக நல அமைப்பு சாா்பில் 5-ஆம் ஆண்டு பனைமர மீட்பு பயணத் திட்டத்தில், பனை விதைகள் நடும் விழாவில் பங்கேற்று பனை விதைகளை நட்டு, அந்தப் பணியைத் தொடக்கிவைத்தாா்.

பூா்ணாங்குப்பம் பகுதியில் புதிய குடிநீா் குழாய்கள் அமைத்து, சீரமைக்கும் பணியை மேற்கொள்ள பேரவைத் தலைவா் உத்தரவிட்டிருந்தாா். இதுதொடா்பாக, சனிக்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்று அந்தப் பணிகளைப் பாா்வையிட்டு, விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com