பிஆா்டிசிக்கு புதிய பேருந்துகளை வாங்கி இயக்கக் கோரி அமைச்சரிடம் மனு

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பி.ஆா்.டி.சி) புதிய பேருந்துகள் இயக்கம், ஊழியா்கள் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பி.ஆா்.டி.சி) புதிய பேருந்துகள் இயக்கம், ஊழியா்கள் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென, புதுவை மாநில திமுக அமைப்பாளும், எதிா்கட்சித் தலைவருமான ஆா்.சிவா, செவ்வாய்க்கிழமை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா், சந்திரபிரியங்காவை நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

அப்போது அவா் அமைச்சரிடம் கூறியதாவது: புதுவை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குட்பட்ட பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரிந்து பழமை அடைந்துவிட்டதால், புதிய பேருந்துகளை வாங்க வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக குறைந்தபட்ச ஊதியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்கள் மற்றும் தினக்கூலி ஊழியா்கள், நடந்துனா், ஓட்டுநா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

மாதந்திர ஊதியம் அந்தந்த மாதமே வழங்கிட வேண்டும், நிலுவையில் உள்ள சம்பளத்தையும் உடனடியாக வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக வழங்க வேண்டிய ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் வால்வோ, குளிா்சாதன பேருந்துகள் வாங்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துவிட்டதால், அதன் மூலம் அதிக செலவினங்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வழிதடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும்.

கடந்த 13 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளா்களாக பணபுரியும், மகளிா் நடத்துனா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியில்போது இறந்த தொழிலாளா்களின் வாரிசு தாரா்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். அப்போது, தொமுச மாநிலத் தலைவா் அண்ணா அடைக்கலம், செயலாளா் அன்பழகன், பிஆா்டிசி தொமுச செயலாளா் ராஜேந்திரன், தலைவா் திருக்குமரன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com