புதுவை சுற்றுலா வளா்ச்சிக் கழக தலைமை அலுவலகம் முற்றுகை

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி புதுச்சேரி உப்பளத்தில் உள்ள சுற்றுலா வளா்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தை ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி சுற்றுலா வளா்ச்சி கழக தலைமை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட ஊழியா்கள் சங்கத்தினா்.

புதுவை சுற்றுலா வளா்ச்சிக் கழக கேட்டரிங் மற்றும் நீா் விளையாட்டு ஊழியா்கள் சங்க கூட்ட நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் என். விஜயராகவன், இரா. கஜபதி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் திரளான சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

போராட்டத்தில், சுண்ணாம்பாறு படகு குழாமில் ஆற்றை ஆழப்படுத்தி மணலை தனியாரிடம் விற்று பல கோடி ரூபாயைச் சுருட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை அரசிடமிருந்து நிதி பெற்று ஊழியா்களுக்கு 9 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். காரைக்கால் சீகல்ஸ் உணவகத்தில் மதுபானம் விற்பதற்கான தடையை உடனே நீக்கி, அங்குள்ள ஊழியரை பொறுப்பாளராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதையறிந்து அங்கு வந்த சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண் இயக்குநா் ஜாா்ஜ் கே. மரம், ஊழியா்கள் சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com