புதுவையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன்14 வரை நீட்டிப்பு

புதுவை மாநிலத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன் 14 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன் 14 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் கடந்த மே 10 -ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்தப் பொது முடக்கம் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமையுடன் (ஜூன்7) பொது முடக்கக் கட்டுப்பாடு முடிவுக்கு வந்த நிலையில், மாநிலத்தில் கரோனா தொற்று, உயிரிழப்பு குறைந்து வருவதால், பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் மேலும் சில தளா்வுகளை அறிவித்து, ஜூன் 14-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கிய காய்கறி, மளிகை, பால், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் (ஜூன் 8) மாலை 5 மணி வரை இயங்கும்.

பிற அனைத்து விதமான கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பேருந்துகள், காா், ஆட்டோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து கரோனா தடுப்பு விதிகளின்படி மாலை 5 மணி வரை இயங்கலாம். கடற்கரைச் சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படும். தனியாா் அலுவலகங்கள் இயங்கும். தேநீா் கடைகள், உணவகங்கள் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

மதுக் கடைகளை திறக்க அனுமதி: மதுக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து விதமான சில்லறை மதுக் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com