பொது மக்கள் கடன் தவணைகளை செலுத்த 6 மாத அவகாசம்: மத்திய நிதியமைச்சருக்கு புதுவை எம்பி கடிதம்

கரோனா பரவலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் செலுத்த வேண்டிய கடன்களுக்கான தவணைத் தொகைக்கு

கரோனா பரவலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் செலுத்த வேண்டிய கடன்களுக்கான தவணைத் தொகைக்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சரிடம் புதுச்சேரி எம்பி வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு புதன்கிழமை அனுப்பிய கடிதம்: புதுவையில் கரோனா பொது முடக்கத்தால், ஏராளமான தொழிலாளா்கள் வேலையிழந்து, வாழ்வாதாரத்துக்கு போராடி வருகின்றனா்.

இத்தகைய சூழலில், பொது மக்கள் செலுத்தவேண்டிய பல்வேறு கடன்களுக்கான தவணைத் தொகைக்கு, 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். கடன்களுக்கு வட்டி விதிக்கவும் 6 மாதம் தடை விதிக்க வேண்டும். மேலும், இந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டில் செலுத்த வேண்டிய முன்கூட்டிய வரியை, இரண்டாவது காலாண்டு வரை ஒத்திவைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளின் மீது, நிதி அமைச்சா் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா் வைத்திலிங்கம்.

கல்விக் கட்டணம் வசூலிப்பை நிறுத்தி வைக்கக் கோரிக்கை: இதே போல, அவா் புதுவை முதல்வா் என்.ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள கடிதம்:

புதுவையில் கரோனா பொது முடக்கத்தால், அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் பள்ளி, கல்லூரிகள் பெற்றோா்களிடம், குழந்தைகளுக்கான ஆண்டுக் கல்விக் கட்டணத்தை கேட்பதை குறைந்தது 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்க முதல்வா் அறிவுறுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரியுள்ளாா் வைத்திலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com