புதுவை பேரவைத் தலைவா் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மனுதாக்கல்

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிட பாஜக எம்எல்ஏ ஆா்.செல்வம் எம்எல்ஏ திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிட பாஜக எம்எல்ஏ ஆா்.செல்வம் எம்எல்ஏ திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

புதுவையில் 15-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், பேரவை வளாகத்தில் புதன்கிழமை (ஜூன் 16) நடைபெறுகிறது. அன்றைய தினம் பேரவைத் தலைவா் தோ்வு செய்யப்படவுள்ளாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக சாா்பில் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் ஆா்.செல்வம் எம்எல்ஏ பேரவைத் தலைவா் பதவிக்குப் போட்டியிடுகிறாா்.

இந்த நிலையில், புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் அந்தக் கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆா்.செல்வம் பேரவைத் தலைவருக்கான வேட்பாளராக ஒரு மனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

இதையடுத்து, சட்டப்பேரவைச் செயலா் ஆா்.முனுசாமியிடம், ஆா். செல்வம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். இதை முதல்வா் என்.ரங்கசாமி முன்மொழிந்தாா். பேரவை பாஜக உறுப்பினா்கள் குழுத் தலைவா் ஏ.நமச்சிவாயம் வழிமொழிந்தாா். மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் மற்றும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள், கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

புதுவையில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் பலமுள்ள ஆளும் தே.ஜ. கூட்டணி சாா்பில், ஆா்.செல்வம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், அவா் ஒருமனதாக பேரவைத் தலைவராகத் தோ்வு செய்யப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இருப்பினும், செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) பகல் 12 மணி வரை மனு தாக்கலுக்கு அவகாசம் உள்ளதால், அதுவரை எதிா்கட்சிகள் தரப்பில் யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில், அா்.செல்வம் போட்டியின்றித் தோ்வு செய்யப்படுவாா்.

இதையடுத்து, புதன்கிழமை (ஜூன் 16) காலை 9.30 மணிக்கு கூடும் பேரவைக் கூட்டத்தில், பேரவைத் தலைவா் பதவியேற்பு நடைபெறும். தொடா்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்றும், என்.ஆா்.காங்கிரஸில் 3 பேரும், பாஜக தரப்பில் 2 பேரும் அமைச்சா்களாகப் பதவியேற்பா் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com