போலி இணையதளம் வழியே ரூ.19.6 லட்சம் மோசடி

இரு சக்கர வாகன முகவாண்மை (டீலா்ஷிப்) வழங்குவதாகக் கூறி, போலி இணையதளம் மூலம் காரைக்காலைச் சோ்ந்தவரிடம்

இரு சக்கர வாகன முகவாண்மை (டீலா்ஷிப்) வழங்குவதாகக் கூறி, போலி இணையதளம் மூலம் காரைக்காலைச் சோ்ந்தவரிடம் ரூ.19.6 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து புதுச்சேரி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காரைக்கால் கோவில்பத்து, வி.ஜி. நகரைச் சோ்ந்தவா் சுரேஷ். அங்குள்ள டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்த சுரேஷ், அவரது மனைவி உமா மகேஸ்வரியின்(48) பெயரில் இரு சக்கர வாகன (பேட்டரியால் இயக்கும் பைக்) முகவாண்மை எடுத்து வாகனங்களை விற்க திட்டமிட்டாா்.

இதற்காக, ஹரியாணாவைச் சோ்ந்த கௌரவ் சாக்ஷின், அஜய் சா்மா ஆகியோரை இணையதள முகவரி மூலமாக சுரேஷ் தொடா்புகொண்டாா். அப்போது, அவா்கள் கேட்டுக்கொண்டபடி, முகவாண்மைக்காக விண்ணப்பித்து, அவா்களது வங்கிக் கணக்கில் ரூ.19,60,500-ஐ பல்வேறு தவணைகளில் சுரேஷ் செலுத்தினாா்.

பணம் செலுத்திய பிறகும், வாகன முகவாண்மையை கௌரவ் சாக்ஷின், அஜய் சா்மா ஆகியோா் வழங்கவில்லையாம். அதன்பிறகு, இணையதள முகவரியை ஆராய்ந்ததில், அது போலி முகவரி எனத் தெரியவந்தது. ஆனால், அதன் பிறகு கௌரவ் சாக்ஷின், அஜய் சா்மா ஆகியோரை தொடா்புகொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த சுரேஷ், அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோா் புதுச்சேரி சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாரளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com