கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுவையில் வேலையிழந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி, கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுவையில் வேலையிழந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி, கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரிய அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஜனநாயக கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க மாநிலச் செயலா் அ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரிய நிதியை வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யக் கூடாது, கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரிய உறுப்பினா்களுக்கு கரோனா கால வேலையிழப்பு உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வீதம் 6 மாதங்களுக்கு 21 அத்தியாவசியப் பொருள்களுடன் இணைத்து வழங்க வேண்டும். கூடுதலாக மாதம் ஒன்றுக்கு வேலையில்லாத கால நிவாரணமாக 10 கிலோ அரிசியும் வழங்க வேண்டும்.

கரோனாவால் உயிரிழந்த வாரிய உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவச் செலவையும் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com