தேசிய திறன் படிப்புதவித் தொகை தோ்வுக்கு மாா்ச் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தோ்வு திட்டத்துக்கு வருகிற 10-ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளியின் மூலம் இணையதளம் வழியாக மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தோ்வு திட்டத்துக்கு வருகிற 10-ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளியின் மூலம் இணையதளம் வழியாக மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை அரசின் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் மைக்கேல் பெனோ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசுப் பள்ளி அல்லது மாநில அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் தற்போது 8-ஆம் வகுப்பில் பயிலும் மாணவா்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் இடைநிற்றலைத் தவிா்ப்பதற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தோ்வுத் திட்டம்  தில்லியில் உள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டு, புதுவை கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வு புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட நான்கு பகுதிகளிலும் (புதுச்சேரி , காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ) வருகிற 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தோ்வின் மூலமாக 125 மாணவா்கள் (புதுச்சேரி - 93, காரைக்கால் - 23, மாஹே - 3, ஏனாம் - 6) தகுதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையிலும், ஜாதி, மண்டல அடிப்படையிலும் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு 9-ஆம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ரூ.12,000-ஐ இந்திய அரசு உதவித் தொகையாக வழங்கும்.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் தங்கள் பள்ளியின் மூலம் என்ற இணையதள முகவரியில் வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com