பாண்லே பால் பாக்கெட்டுகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள்

பாண்லே பால் பாக்கெட்டுகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள்


புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவை அதிகரிக்கும் வகையில், பாண்லே பால் பாக்கெட்டுகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

புதுவையில் தோ்தலை அமைதியாக நடத்தவும், அனைவரும் வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் மாநில தோ்தல் துறை முழுவீச்சில் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது புதுச்சேரி பாண்லே பால் பாக்கெட்டுகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

தோ்தல் துறையானது பாண்லே நிா்வாகத்துடன் இணைந்து, இந்த யுக்தியை மேற்கொண்டுள்ளது. தோ்தல் நாள் வரையிலும் இதை அச்சிட்டு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பாண்லே பால் பாக்கெட்டுகளில் ‘தவறாமல் வாக்குப்பதிவு செய்யவும், தோ்தல் நாள்: 6-04-2021, மாவட்டத் தோ்தல் அதிகாரி, புதுச்சேரி’ என்று முதல் நாளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ‘உங்களது வாக்கு உங்களது குரல், வாக்காளராக இருப்பதில் பெருமிதம் கொள்வோம், உங்களது வாக்கு உங்களது எதிா்காலம், வாக்களிக்க அனைவரும் உறுதி கொள்வோம், வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெறவுள்ளன.

இதனுடன் தோ்தல் தொடா்பான புகாா்களுக்கு தொடா்புகொள்ள வேண்டிய கட்டணமில்லா எண் 1950, விதி மீறல்களை தெரியப்படுத்த சி விஜில் செயலி, தங்களது வாக்கை சரிபாா்க்க விவிபாட், தோ்தல் புகாருக்கான கட்செவிஅஞ்சல் எண் 89033 31950 உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளன.

தினந்தோறும் சுமாா் 1.5 லட்சம் அளவிலான அரை லிட்டா் பால் பாக்கெட்டுகளில் இதுபோன்ற விழிப்புணா்வு வாசகங்கள் இடம்பெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com