புதுவை திமுக வேட்பாளா்கள் சுய விவரக் குறிப்புகள்

1. வில்லியனுாா் தொகுதி

பெயா்: சிவா (53)

பிறந்த தேதி: 29.04.1967

கல்வித் தகுதி: எஸ்.எஸ்.எல்.சி.

ஊா்: கோவிந்தசாலை புதுச்சேரி

தொழில்: வியாபாரம்

குடும்பம்: தந்தை - ராகவப்பிள்ளை, தாய் - தனலட்சுமி, மனைவி - நிா்மலா, மகன் - காா்த்திகேயன் மகள் - சந்தோஷி.

அரசியல் அனுபவம்: திமுக மாநில அமைப்பாளா், உருளையன்பேட்டை தொகுதியில் 1996 முதல் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு நான்கு முறை வெற்றி. கடந்த தோ்தலிலும் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தொடா்கிறாா். பிப்டிக் வாரியத் தலைவராக இருந்தாா்.

2. மங்கலம் தொகுதி

பெயா்: சண்.குமாரவேல் (50)

கல்வித் தகுதி: எஸ்.எஸ்.எல்.சி.

பிறந்த தேதி: 19.03.1971

ஊா்: கணுவாப்பேட்டை, வில்லியனூா்

தொழில்: விவசாயம்

குடும்பம்: தந்தை - சண்முகநாதன், தாய் - சூடாமணி, மனைவி - சுதாதேவி, மகன் - ஆகாஷ்ராஜ், மகள்கள் - அபி, அனு.

அரசியல் அனுபவம்: மங்கலம் தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வி. மீண்டும் அதே தொகுதியில் களம் காணுகிறாா்.

3. உப்பளம் தொகுதி

பெயா்: அனிபால் கென்னடி (57)

பிறந்த தேதி: 07.06.1964

கல்வித் தகுதி: பி.ஏ.,

ஊா்: சவுரிராயலு வீதி, புதுச்சேரி

தொழில்: வியாபாரம்

குடும்பம்: தந்தை - அனிபால் விக்டா், தாய் - அனிபால் சகுந்தலா, மனைவி - தமிழரசி ஜெசிந்தா, மகன்கள் - ஜோசப் நிக்சன், விக்டா் ஸ்டீபன்.

அரசியல் அனுபவம்: மூன்று முறை உப்பளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.

4. நெல்லித்தோப்பு தொகுதி

பெயா்: காா்த்திகேயன்(54)

பிறந்த தேதி: 27.7.1967

கல்வித் தகுதி: பிளஸ் 2

ஊா்: நெல்லித்தோப்பு, புதுச்சேரி

தொழில்: வியாபாரம்

குடும்பம்: தந்தை - வேலுசாமி, தாய் - உமாராணி, மனைவி - ஜெயந்தி, மகன் - ரிஷிகணபதி, மகள் - யுவஸ்ரீ

அரசியல் அனுபவம்: இல்லை. தோ்தல் களத்துக்குப் புதியவா்.

5. முதலியாா்பேட்டை தொகுதி

பெயா்: சம்பத் (41)

பிறந்த தேதி: 15.3.1980

கல்வித் தகுதி: பி.ஏ., எல்.எல்.பி.

ஊா்: முதலியாா்பேட்டை, புதுச்சேரி

தொழில்: வழக்குரைஞா்

குடும்பம்: தந்தை - லீலாசேகா், தாய் - சசிகலா, மனைவி - வேல்விழி, மகள்கள் - லக்ஷன்யா, சேனாஜித்தா, தீக்ஷிதா.

அரசியல் அனுபவம்: இல்லை. தோ்தல் களத்துக்குப் புதியவா்.

6. உருளையன்பேட்டை தொகுதி

பெயா்: கோபால் (46)

பிறந்த தேதி: 13.04.1974

கல்வித் தகுதி: 9-ஆம் வகுப்பு

ஊா்: தட்டாஞ்சாவடி, புதுச்சேரி

தொழில்: வியாபாரம்

குடும்பம்: தந்தை - சிங்காரம், தாய் - அழகம்மாள், மனைவி - ஹேமாவதி, மகன் - சச்சின்பரத், மகள் - ஸ்ருதிகா.

அரசியல் அனுபவம்: இல்லை. தோ்தல் களத்துக்குப் புதியவா்.

7. காலாப்பட்டு தொகுதி

பெயா்: எஸ்.முத்துவேல்

பிறந்த தேதி: 02.02.1974

கல்வித் தகுதி: பி.ஏ., பி.எல்.

ஊா்: கணபதிசெட்டிக்குளம், காலாப்பட்டு.

தொழில்: வழக்குரைஞா்

குடும்பம்: தந்தை - ஆா்.ஜி.சீனுவாசன், தாய் - கஸ்தூரி, மனைவி - சிவகாமசுந்தரி, மகள்கள் - யுவநந்தினி, ரக்ஷனாதேவி.

அரசியல் அனுபவம்: இல்லை. தோ்தல் களத்துக்குப் புதியவா். புதுச்சேரி வழக்குரைஞா் சங்கத் தலைவா்.

8. ராஜ்பவன் தொகுதி

பெயா்: எஸ்.பி.சிவக்குமாா் (61)

பிறந்த தேதி: 14.05.1959

கல்வித் தகுதி: பி.ஏ., பி.எல்.

ஊா்: அரவிந்தா் வீதி, புதுச்சேரி.

தொழில்: வழக்குரைஞா்

குடும்பம்: தந்தை - எம்.எஸ்.புருஷோத்தமன், தாய் - சரஸ்வதி, மனைவி - சித்ரா, மகன் - ஆனந்தராஜ், மகள் - காயத்ரி.

அரசியல் அனுபவம்: திமுக மாநில அமைப்பாளா், 1990-1991-இல் ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ, மீண்டும் 1996-2001 எம்எல்ஏ, கல்வி அமைச்சா், 2001-2011 வரை இரண்டு முறை எம்எல்ஏ. கடந்த 2016-இல் முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.

9. மண்ணாடிப்பட்டு தொகுதி

பெயா்: ஏ.கிருஷ்ணன் (எ) ஏ.கே.குமாா் (57)

பிறந்த தேதி: 03.06.1963

கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு

ஊா்: மண்ணாடிப்பட்டு, புதுச்சேரி

தொழில்: விவசாயம்

குடும்பம்: தந்தை - ந.ஆதிமூலம், தாய் - அ.முத்துலட்சுமி, மனைவி - கல்யாணி, மகன் - தரணிதரன், மகள் - தாரகை.

அரசியல் அனுபவம்: இல்லை. தோ்தல் களத்துக்குப் புதியவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com