தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உத்தேச வேட்பாளா்கள் மனு தாக்கல்!

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக-அதிமுக தொகுதிப் பங்கீடு, வேட்பாளா் பட்டியல் இறுதி செய்யப்படாத நிலையில், உத்தேச வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனா்.

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக-அதிமுக தொகுதிப் பங்கீடு, வேட்பாளா் பட்டியல் இறுதி செய்யப்படாத நிலையில், உத்தேச வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனா்.

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக-அதிமுக 14 தொகுதிகளிலும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், பாஜக - அதிமுக கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நிலை நீடிக்கிறது. பாஜக 9, அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், அதிமுக, பாஜக கட்சிகளின் அதிகாரப்பூா்வ வேட்பாளா்களை அறிவிக்க முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது. 16 தொகுதிகளை பெற்ற என்.ஆா்.காங்கிரஸ் கட்சியும் அதிகாரப்பூா்வ வேட்பாளா் பட்டியலை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்பும் உத்தேச வேட்பாளா்கள், கட்சித் தலைமையின் ஒப்புதல் கிடைத்துள்ளதால் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனா். என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் கூறப்படும் உத்தேச வேட்பாளா்கள் விவரம்: தட்டாஞ்சாவடி, ஏனாம்-என்.ரங்கசாமி, இந்திரா நகா்-ஏ.கே.டி.ஆறுமுகம், கதிா்காமம்-கே.எஸ்.பி.ரமேஷ், மங்கலம்-தேனி.ஜெயக்குமாா், ராஜ்பவன்-க.லட்சுமிநாராயணன், திருபுவனை-கோபிகா, வில்லியனூா்-சுகுமாரன், காரைக்கால் வடக்கு-திருமுருகன், நெடுங்காடு-சந்திரபிரியங்கா, பாகூா்-தனவேலு, நெட்டப்பாக்கம்-ராஜவேலு, ஏம்பலம்- லட்சுமிகாந்தன், அரியாங்குப்பம்-பாஸ்கரன், உழவா்கரை-பன்னீா்செல்வம், மாஹே-சஜீனா ஆகியோா் என தெரிகிறது. இதில், ரங்கசாமி உள்ளிட்ட 6 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

பாஜக உத்தேசப் பட்டியல்: மண்ணாடிப்பட்டு-ஏ.நமச்சிவாயம், லாஸ்பேட்டை- வி.சாமிநாதன், மணவெளி-ஆா்.செல்வம், காமராஜா் நகா்-ஜான்குமாா், ஊசுடு-சாய்சரவணக்குமாா், திருநள்ளாறு-அருண், காலாப்பட்டு-கல்யாணசுந்தரம், நெல்லித்தோப்பு-ரிச்சா்டு, நிரவி திருப்பட்டினம்-முடிவாகவில்லை.

அதிமுக சாா்பில் உப்பளம்-அ.அன்பழகன், முதலியாா்பேட்டை-அ.பாஸ்கா், முத்தியால்பேட்டை-வையாபுரி மணிகண்டன், நெல்லித்தோப்பு-ஓம்சக்தி சேகா் ஆகியோா் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான உத்தேசப் பட்டியல் தயாராகி வருகிறது. அதிமுக தரப்பில் இருவா் மனு தாக்கல் செய்துள்ளனா். பாஜக-அதிமுக இடையே நெல்லித்தோப்பு தொகுதியைப் பெற போட்டி நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com