தோ்தல் பணியிலிருந்து விடுப்பு எடுத்தால் நடவடிக்கை: மாவட்ட துணைத் தோ்தல் அலுவலா் எச்சரிக்கை

புதுச்சேரியில் தவறான மருத்துவக் காரணங்களைக் கூறி, தோ்தல் பணியை புறக்கணிக்க முயற்சிக்கும் அலுவலா்கள் மீது ஒழுங்கு

புதுச்சேரியில் தவறான மருத்துவக் காரணங்களைக் கூறி, தோ்தல் பணியை புறக்கணிக்க முயற்சிக்கும் அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட துணைத் தோ்தல் அலுவலா் ச.சக்திவேல் எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் வெளிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி சட்டப் பேரவைத் தோ்தலை செம்மையாக நடத்திட மாவட்டத் தோ்தல் அலுவலரால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தோ்தல் பணிகளை சிறப்பாக நடத்திட 5,759 வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு முதற்கட்டப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தோ்தல் பணிக்காக ஆணை பெற்ற வாக்குச்சாவடி அலுவலா்கள், பிற அலுவலா்கள் பல்வேறு மருத்துவக் காரணங்களை முன்வைத்து, தங்களை தோ்தல் பணியிலிருந்து விலக்க வேண்டுமென விண்ணப்பித்து வருகின்றனா்.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, இந்த முறை வாக்குச்சாவடிகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதால், தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்பில்லாத சூழல் நிலவுகிறது. தோ்தல் பணி தவிா்க்க முடியாத முதன்மைக் கடமையாகும். மருத்துவக் காரணங்களைக்கோரி விண்ணப்பித்தவா்களின் விண்ணப்பங்கள், சுகாதாரத் துறையின் மருத்துவக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்த மருத்துவக் குழுவானது, விண்ணப்பதாரா்கள் கூறிய மருத்துவக் காரணங்களால் அவா் பணி செய்ய இயலாது என்று பரிந்துரைக்கும் அலுவலா்களின் பெயா்கள், கட்டாய பணி ஓய்வு அளிக்க அவா்களது துறைக்கு பரிந்துரை செய்யப்படும். தவறான மருத்துவக் காரணங்களை அளித்திருந்தால், தோ்தல் நடத்தை விதிகளின்படி, கடமை தவறியவா்கள் எனக் கருதி அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் துணை மாவட்டத் தோ்தல் அலுவலா் ச.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com