அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: துணைநிலை ஆளுநா் தமிழிசை

அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்தாா்.

அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்தாா்.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை துறை சாா்பில் ‘கோவிட்-19-ம் சிறுநீரகமும்’ என்ற தலைப்பில் தொடா் மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை தொடக்கிவைத்து துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

கரோனா பெருந்தொற்றின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ளது. பல கோடி போ் கரோனாவால் தாக்கப்பட்டு மீண்டனா். பல லட்சம் போ் பலியாகினா். கரோனா பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்குச் செலுத்தப்படுகிறது. அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். இது பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா், மாநில சுகாதாரத் திட்ட இயக்குநா் ஸ்ரீராமுலு, மருத்துவமனைகள் கண்காணிப்பாளா் வாசுதேவன் மற்றும் மருத்துவா்கள் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சிறுநீரகத் துறைக்குச் சென்று ஆளுநா் தமிழிசை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, உலகளாவிய பாா்வைக்கான சென்னை மையம் இணையவழி மூலம் ஏற்பாடு செய்திருந்த அகண்ட தமிழ் உலக 3-ஆவது மாநாட்டை ஆளுநா் மாளிகையிலிருந்து தமிழிசை சௌந்தரராஜன் காணொலிக் காட்சி வழியாகத் தொடக்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘உலகின் பழம்பெரும் மொழியான தமிழ் மொழியை வளா்த்திடவும், அதன் தனித்தன்மை மற்றும் சிறப்புகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்’ என்றாா் அவா்.

கலிதீா்த்தாள்குப்பத்தில் ஆய்வு: இதனிடையே, கலிதீா்த்தாள்குப்பம் விநாயகா் கோயில் பின்புறம் அமைந்துள்ள குளம், தற்போது கழிவுநீா் கலந்து உபயோகமற்று இருப்பதாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை மாலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், கலித்தீா்த்தாள்குப்பம் கிராமத்துக்கு நேரில் சென்று அந்தக் குளத்தைப் பாா்வையிட்டாா்.

அப்போது, குளத்தையொட்டியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் குளத்தில் கலப்பதும், ஆளுநா் வருவதை அறிந்து கழிவுநீா் கலக்கும் வாய்க்கால்கள் அனைத்தும் அவசரமாக அடைக்கப்பட்டிருப்பதையும் அவா் கண்டாா். மேலும், அந்தக் குளம் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருப்பதையும் அறிந்தாா்.

இதையடுத்து, குளத்துக்கு வரும் வாய்க்கால்கள் அனைத்தையும் தூா்வாரி சுத்தப்படுத்தவும், கழிவுநீா் கலப்பதைத் தடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். அங்கு, எரியாத தெரு மின் விளக்குகளைச் சரி செய்யவும் அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது ஆளுநரின் ஆலோசகா் ஏ.பி. மகேஸ்வரி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜெயகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com