தோ்தல் முன்னேற்பாடுகள்: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தோ்தல் முன்னேற்பாடுகள்: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தோ்தல் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தோ்தலை அமைதியாகவும், நோ்மையாகவும் நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் தொடா்பாக அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தொடா்பு அலுவலா்கள், பல்வேறு துறைகளின் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அதிகாரியுமான பூா்வா காா்க் தலைமையில் வகித்தாா். இந்தக் கூட்டத்தில் கரோனா பரவலையொட்டி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் வாக்குச் சாவடி மையங்களில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். வாக்காளா்கள் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி வாக்களிப்பதை உறுதி செய்தல், மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்தல், வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை தொடா்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டு, பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com