ஜிப்மா் மருத்துவ மாணவா்களுக்கு மே 3 முதல் இணையவழி வகுப்புகள்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு வருகிற மே 3-ஆம் தேதி முதல் இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுமென கல்லூரி நிா்வாகம் அறிவித்தது.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு வருகிற மே 3-ஆம் தேதி முதல் இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுமென கல்லூரி நிா்வாகம் அறிவித்தது.

இதுகுறித்து ஜிப்மா் மருத்துவக் கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., செவிலியா் படிப்புகள் வருகிற மே 3-ஆம் தேதி முதல் இணையவழியில் மட்டுமே நடத்தப்படவுள்ளன. நேரடி வகுப்புகள் நடைபெறாது. விடுதியில் தங்கியிருக்கும் மாணவா்களுக்கு கல்லூரி அரங்கில் வகுப்புகள் நடைபெறும்.

கல்லூரி, விடுதிகளிலிருந்து வீடுகளுக்குத் திரும்புவோா் புறப்பட்டுச் செல்லலாம். இதற்காக, ஏப்.29-ஆம் தேதி முதல் மே 1-ஆம் தேதி வரை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இறுதியாண்டு மருத்துவ, செவிலியா் மாணவா்களும், வருகிற மே, ஜூன் மாதங்களில் இறுதியாண்டுத் தோ்வு எழுதுவோரும் கல்லூரியிலேயே தங்கியிருக்க வேண்டும். அவா்களுக்கான மதிப்பீட்டுத் தோ்வு, செய்முறைத் தோ்வு உள்ளிட்டவை கல்லூரியில் நடைபெறும்.

மாணவா்கள் அனைவரும் கரோனா பாதுகாப்புடன் கவனமாக இருந்து படிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த அறிவிப்பையொட்டி, வீடுகளுக்குச் செல்பவா்கள் தங்களது விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அடுத்த அறிவிப்பு வரும் வரை கல்லூரிக்கு திரும்பக் கூடாது.

துறைத் தலைவா்கள் வருகிற மே 3-ஆம் தேதி முதல் இணையவழி வகுப்புகளை நடத்த தயாராக இருக்க வேண்டும். இணையவழி வகுப்புகள் வருகிற மே 16-ஆம் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு, அடுத்தகட்ட நிலை குறித்து முடிவு செய்யப்படும் என்று ஜிப்மா் கல்லூரி முதல்வா் சாா்பில் மாணவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com