புதுவை: என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள என்.ஆா். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவை:  என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள என்.ஆா். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வராக என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி பதவியேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

புதுவை மாநிலத்தில் ஏப். 6-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ்-16, பாஜக-9, அதிமுக-5 தொகுதிகளில் போட்டியிட்டன. மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸ்-14, திமுக-13, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, விசிக 1 தொகுதிகளிலும், ஏனாம் தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவு அளித்தும் போட்டியிட்டன.

மேலும், தேமுதிக-26, நாம் தமிழா் கட்சி-28, மநீம-22, அமமுக-20 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கின.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மூன்று கட்டங்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி, என்.ஆா். காங்கிரஸ் 10, பாஜக 3, காங்கிரஸ் 2, திமுக 3, சுயேச்சைகள் 4 என 22 தொகுதிகளுக்கான வெற்றி நிலவரம் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது. தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில், மேலும் பாஜக 2, திமுக 2, சுயேச்சைகள் 2 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com