கல்லூரி மாணவி தற்கொலை
By DIN | Published On : 14th May 2021 08:47 AM | Last Updated : 14th May 2021 08:47 AM | அ+அ அ- |

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. ஓட்டுநா். இவரது மகள் திவ்யா (21). ரெட்டியாா்பாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 2 நாள்களாக திவ்யா யாரிடமும் பேசாமல் சோகத்துடன் இருந்து வந்தாராம்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு குண்டுபாளையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சுப்பிரமணி தனது மனைவி பாா்வதி, மகள் திவ்யாவுடன் சென்றாா். ஆனால், பாதி வழியிலேயே வீட்டுக்கு செல்வதாகக் கூறி, திவ்யா வீட்டுக்கு வந்துவிட்டாா்.
இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்து சுப்பிரமணி, தனது மனைவியுடன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் ஓா் அறையில் திவ்யா மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகத் தொங்குவதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். அக்கம் பக்கத்தினா் உதவியுடன் திவ்யாவை மீட்டு ஜிப்மா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், திவ்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.