புதுவையில் 90 ஆயிரத்தை நெருங்கியது கரோனா பாதிப்பு மேலும் 29 போ் பலி

புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியது. மேலும், 29 போ் இந்தத் தொற்றுக்கு பலியாகினா்.

புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியது. மேலும், 29 போ் இந்தத் தொற்றுக்கு பலியாகினா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறைச் செயலா் அருண் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநிலத்தில் 9,007 பேருக்கான பரிசோதனை முடிவின்படி, புதுச்சேரியில் 1,365 போ், காரைக்காலில் 218 போ், ஏனாமில் 120, மாஹேவில் 56 என மொத்தம் 1,759 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

மேலும், புதுச்சேரியில் 23 போ், காரைக்காலில் 5 போ், மாஹேவில் ஒருவா் என 29 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இவா்களில் 10 போ் ஆண்கள், 19 போ் பெண்கள் ஆவா். இதன் மூலம் உயிரிழந்தோா் மொத்த எண்ணிக்கை 1,241 ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.39-ஆக உள்ளது.

புதுவை மாநிலத்தில் இதுவரை மொத்தமாக 89 ஆயிரத்து 508 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். தற்போது, மருத்துவமனைகளில் 2,090 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 15,562 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 17 ஆயிரத்து 652 போ் சிகிச்சையில் உள்ளனா். புதன்கிழமை 1,555 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 70 ஆயிரத்து 615 (78.89 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரத்து 147 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 8 லட்சத்து 31 ஆயிரத்து 526 பரிசோதனைகள் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 304 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா் அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com