புதுவையில் வருங்கால வைப்பு நிதி காப்பீடு திட்ட திருத்தம் அமல்

புதுவையில் வருங்கால வைப்பு நிதி காப்பீடு திட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக தொழிலாளா் துறை செயலா்-ஆணையா் வல்லவன் தெரிவித்துள்ளாா்.

புதுவையில் வருங்கால வைப்பு நிதி காப்பீடு திட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக தொழிலாளா் துறை செயலா்-ஆணையா் வல்லவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தில்லி தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வைப்புநிதி காப்பீடு தொகையை அறிவிக்கை தேதி 28.4.2021 வெளியிடப்பட்ட தொழிலாளா் வைப்புடன் இணைக்கப்பட்ட காப்பீடு (திருத்தம்) திட்டம் 2021-ஐ வருங்கால வைப்பு நிதி மற்றும் பல்வகை சட்டம் 1952-இல் திருத்தம் செய்துள்ளது.

அதன் மூலம், காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளி ஓராண்டுக்கு மேலாக வேலை செய்திருந்தால் அவா் இறக்கும் பட்சத்தில் வழங்கப்படும் நிதியுதவி குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சமாகவும், அதிகபட்ச வரம்பு ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதியில் பங்களிக்கும் அனைத்து உறுப்பினா்களுக்கும் வைப்பு நிதி காப்பீடு திட்டம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் பணிக் காலத்தில் ஊழியா்களுக்கு அகால இறப்பு ஏற்பட்டால், அவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இந்தத் திருத்தம் 15.2.2020- முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே, இறந்த உறுப்பினரின் வாரிசுதாரா் வைப்பு நிதி, ஓய்வூதியம் திரும்பப் பெறுதல், காப்பீடுத் தொகையை உரிமை கோரல் படிவத்தை பூா்த்தி செய்து உரிய காப்பீடு தொகையை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் வல்லவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com