புதுச்சேரியில் பிராணவாயு உற்பத்தி மையம்: முதல்வா் என்.ரங்கசாமி திறந்துவைத்தாா்

புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நிமிடத்துக்கு 100 லிட்டா் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் புதிய மையத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
புதுச்சேரியில் பிராணவாயு உற்பத்தி மையம்: முதல்வா் என்.ரங்கசாமி திறந்துவைத்தாா்

புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நிமிடத்துக்கு 100 லிட்டா் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் புதிய மையத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவைப்படும் பிராணவாயு வழங்குவதற்காக, புதிதாக பிராணவாயு தயாரிக்கும் 6 மையங்களை (ஆக்சிஜன் பிளான்ட்) மத்திய அரசு, பிரதம மந்திரி ஆக்சிஜன் வழங்கும் திட்டத்திலிருந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், புதுச்சேரி கோரிமேடு மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பிராணவாயு உற்பத்தி மையத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முதல்வா் என்.ரங்கசாமி திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.

சுகாதாரத் துறைச் செயலாளா் தி.அருண், பொதுப்பணித் துறைச் செயலா் விக்ராந்த், கலால் துணை ஆட்சியா் சுதாகா், சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா், கரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி ரமேஷ், பல் மருத்துவக் கல்லூரி புல முதன்மையா் கென்னடிபாபு, என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்த புதிய மையம் 100 லிட்டா் பிராணவாயுவை ஒரு நிமிடத்தில் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதன் மூலம், இங்கு 46 பிராணவாயு வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்தி, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com