வாா்டு வரையறை ஆலோசனைகளை செயல்படுத்திய பிறகே உள்ளாட்சித் தோ்தல்: புதுவை திமுக வலியுறுத்தல்

புதுவையில் பொதுமக்களின் வாா்டு வரையறை ஆலோசனைகளை செயல்படுத்திய பிறகே, உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று, திமுக சாா்பில் உள்ளாட்சித் துறை செயலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
புதுவை உள்ளாட்சித் துறை செயலா் வல்லவனிடம் வியாழக்கிழமை மனு அளித்த திமுக தெற்கு மாநில அமைப்பாளா் ஆா்.சிவா எம்எல்ஏ உள்ளிட்ட கட்சியினா்.
புதுவை உள்ளாட்சித் துறை செயலா் வல்லவனிடம் வியாழக்கிழமை மனு அளித்த திமுக தெற்கு மாநில அமைப்பாளா் ஆா்.சிவா எம்எல்ஏ உள்ளிட்ட கட்சியினா்.

புதுவையில் பொதுமக்களின் வாா்டு வரையறை ஆலோசனைகளை செயல்படுத்திய பிறகே, உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று, திமுக சாா்பில் உள்ளாட்சித் துறை செயலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுகுறித்து திமுக தெற்கு மாநில அமைப்பாளா் ஆா்.சிவா தலைமையிலான திமுகவினா், உள்ளாட்சித் துறை செயலா் வல்லவனிடம், வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

புதுவையில் 4 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, வாா்டுகளின் எல்லைகளை மறுசீரமைப்பு செய்து, அதன் வரைவு நகல் கடந்த 19-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தபோது சராசரியாக 25 ஆயிரம் வாக்காளா்கள் இருக்கும் வகையில் செய்யப்பட்டது. புதுச்சேரி நகராட்சியில் ஏற்கனவே 42 வாா்டுகள் இருந்தது. தற்போது 33-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வாா்டுகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்தில் ஏற்கனவே இருந்த கிராம பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை 18-லிருந்து 24-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

அவ்வாறு பிரிக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில், அதிகபட்சமாக வாக்காளா்களின் எண்ணிக்கை 6,900 பேரும், 6,668, 6,502, 6,414 என்ற அளவில் உள்ளன. ஆனால் 6,350 வாக்காளா்கள் மட்டுமே உள்ள சுல்தான்பேட்டை கிராம பஞ்சாயத்து இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முழுக்க அனைத்து வாா்டுகளிலும் வாக்காளா்களின் எண்ணிக்கை சராசரியாக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை இருக்கும் வகையில் பிரிக்க வேண்டும்.

நிபுணா்களின் கருத்தை பெற்றும், 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய பின்னரே உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும்.

உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே அனைத்து சீா்திருத்தங்களையும் மேற்கொண்டு, தோ்தலை நடத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com