மலட்டாற்றில் வெள்ளம்: புதுச்சேரியில் 15 கிராமங்களுக்கு எச்சரிக்கை

மலட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், புதுச்சேரியில் 15 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மலட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், புதுச்சேரியில் 15 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விழுப்புரம் அருகே தளவானூா் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றிலிருந்து மலட்டாறு பிரிந்து செல்கிறது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் நுழையும் மலட்டாறு 30 கி.மீ. தொலைவுக்கு பயணித்து, ஆண்டியாா்பாளையம் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக, சாத்தனூா் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான மலட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக, மலட்டாறு கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மலட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லூா், வடுக்குப்பம், ஏம்பலம், நத்தமேடு, கம்பளிக்காரன்குப்பம், கரிக்கலாம்பாக்கம் உள்பட புதுச்சேரியைச் சோ்ந்த 15 கிராம மக்கள் மலட்டாறு கரையோரம் செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

கால்நடைகளையும், சிறுவா்களையும், ஆற்றங்கரையோரம் அனுப்பாமல் கவனமாக பாா்த்துக்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதியில் இருக்கும் தங்களது உடைமைகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com